• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு!

தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/26
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தான எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாடு நெருப்பாலும் வெள்ளத்தாலும் அழிந்த நாடு அல்ல. அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த பொக்கிஷமே எமது நாடு.

ஆனால், இந்த மாபெரும் பொக்கிஷத்தில், உண்பதற்கும் குடிப்பதற்கும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மருந்தின்றி இறந்து போகின்றார்கள், வீடின்றி வாழ்கின்றார்கள்.

ஆகையால், ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை வளர்க்கவில்லை.

எனவே, தேசிய மக்கள் சக்தியுடன், மக்களும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியம் என தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது.

நாம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம்.

இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள்.

அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு – தெற்கிலுள்ள அரசியல் வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம்.

பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, 1981 இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்கிமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள்.

தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள்.

அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன்.

வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர், 1981 இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள்.

தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது.

மக்கள் விடுதலை முன்னியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜேஆர் ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார்.

இதனால், ஜேஆர் ஜெயவர்தனவும், ரணில் விக்கிமசிங்கவும் இணைந்து 1 ஆம், 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு தீவைத்தார்கள். ஒரு கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். அநுராதப்புரம் சிற்றம்பலம் மண்பத்தையிட்டு கொழுத்தினார்கள். முழு நாடும் தீப்பற்றி எரிந்தது. இதனை ஜேஆர் ஜெயவர்தனவின் ரௌடிகளே செய்தார்கள்.

ஆனால், 83 இன் கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னியினரே காரணம் என எம் கட்சியை தடை செய்தார்கள்.

இதனால், தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், உயிர் காவுக்கொல்லப்படுவதையும், தெற்கிலிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்படுவதையும் நினைத்து, பிரபாகரனுக்கு வடக்கில் புதிய அரசாங்கமொன்று உருவாக்க வேண்டிய தேவையேற்பட்டது.

ஆகவே, தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவதையும், வடக்கில் நூலகத்தை எரித்தமையும் கூறி வடக்கு இளைஞர்களை யுத்தத்துக்காக அழைத்தார்.

ஆயுதமேந்திய மாபெரும் இயக்கத்தை பிரபாகரன் உருவாக்கினார்.

இதில் சாதாரண தாய் தந்தைகளின் பிள்ளைகளின் உயிர்களே பறிபோயின.

இந்த நாட்டிலுள்ள சிங்கள கிராமங்கள் அச்சத்துடன் காணப்பட்டன. அவர்களின் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்தனர்.

மேலும், வுவனியாவை சற்று தள்ளி வாழும் தமிழ் மக்களும் பயத்துடனே வாழ்ந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் LTTE யுடன் இணைந்தார்கள்.

மேலுள்ள ஆட்சியார்கள் யுத்தம் செய்தார்கள். எமது கிராமங்கள் பாதுகாப்பற்று காணப்பட்டது.

மேல் உள்ள ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கினார்கள். எமது பிள்ளைகள் யுத்தத்துக்கு சென்றார்கள்.

ஆகவே, எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பிரதான சில காரணங்கள் இருக்கின்றன.

அதாவது, தற்போது நமக்கு சண்டையற்ற ஒரு நாடு தேவை. பிரிவினைவாதயில்லாத, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாடே தேவை.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுயுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

எமது பரம்பரை யுத்தம் செய்துக்கொண்ட பரம்பரை. ஆனால் எமது பிள்ளைகளுக்கு யுத்தம் செய்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.

Related

Tags: Anurakumara disanaykeVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 போட்டியின் இறுதிபோட்டி!

Next Post

குஜராத் தீ விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
Next Post
குஜராத் தீ விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

குஜராத் தீ விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் சடலமாக மீட்பு!

காசாவில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் – குழந்தைகளின் உயிரிழப்பிற்கு உலக நாடுகள் கண்டனம்!

ஹமாஸ் போராளிகள் மீண்டும் தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.