மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சித்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்றையதினம் குறித்த பகுதியில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டு எல்லையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது குறித்த இடத்திற்கு சென்றிருந்த இருவரும் நிலைமைகளை பார்வையிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணிகளை எல்லையிடுவதாகாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் பாதுகாப்பு கெமராக்கல் அகற்றப்பட்டு மாநகரசபையின் வாகனங்களில் ஏற்றப்பட்டு மாநகரசபைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.