நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கீடு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபாய் நிதி இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியானது ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரட்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலுக்கான நிதியினை ஒதுக்கமுடியாது என்றும் ஆனால் அதற்கான
நிதியினை ஜனாதிபதியினால் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.