”பொதுஜன பெரமுன இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிழலிலே வாழ்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள்
மீண்டும் மக்களின் ஆணையை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்களின் ஆணை கிடைக்காது. ஏனென்றால் இந்த நாட்டில் டீல் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அரசியலை முன்னெடுத்தவர்கள் கூட இன்று ஜக்கிய மக்கள் சக்தியாகிய எம்முடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியே இன்று பொதுஜன பெரமுனவை பாதுகாக்கின்றது.
ஜனாதிபதியிடம் நான் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
அதாவது ராஜபக்ஷ தரப்பினரை பாதுகாப்பதற்கான முயற்சிகளை கைவிடுங்கள். பொதுஜன பெரமுன இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிழலிலே வாழ்கின்றனர். இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து தேர்தலை விரைவுபடுத்துங்கள்.
நாட்டு மக்களை இனியும் உங்களால் ஏமாற்ற முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.