நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த Aura Lanka நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Aura Lanka நிறுவனத்தின் தலைவரும், வர்த்தகருமான விரஞ்சித் தம்புகல, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர், Aura Lanka நிறுவனத்தின் தலைவர் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.