கடும் மழையினால் புத்தளம் புகையிரத பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் புத்தளத்திற்கும் இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளொன்றுக்கு கொழும்பில் இருந்து புத்தளம் வரை இயங்கும் 4 ரயில்களில் இரண்டு புத்தளம் புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நான்கு புகையிரதங்களில் இரண்டு தற்போது இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முந்தலத்தில் இருந்து புத்தளம் வரையான வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக கடந்த 21ஆம் திகதி முதல் கொழும்பில் இருந்து பங்கதேனி வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.