”அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரால் பொருளாதார கொள்கைதிட்டம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கமுடியாது”என என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது கட்சி தலைவர் மற்றும் பொருளாதார குழுவுடன் விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான திகதியையும் அறிவித்துள்ளோம். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி விவாதத்தில் பங்கேற்க பின்வாங்குகின்றது.
இந்த நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் இல்லாமையினாலேயே அவர்கள் பின்வாங்குகின்றனர்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். அவர்கள் இந்த நாட்டை அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்றவர்கள். ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்த்திலும் விவாதத்திற்கு தயார் என்பதை தெளிவாக கூறியுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.