குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை அடுத்த சில மாதங்களில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இப்பணிகளுக்காக 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
மேலும் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வருமான மட்டத்தை உயர்த்துதல், அவர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்டு விவசாயத் திட்டங்களை அமைக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.