பொருளாதார கொள்கை திட்டம் தொடர்பான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவுக்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விவாதங்கள் தொடர்பாக தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முதலில் தலைமைத்துவ விவாதமும் அதன் பின்னர் பொருளாதார குழுவுடனான விவாதமும் நடத்தப்பட வேண்டும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும்
இடையிலான விவாதம் நடைபெறுவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி ஜக்கிய மக்கள் சக்தி இரு தலைவர்களும் இணைந்து நேரடி விவாதத்தில் ஈடுபடுவதற்கான திகதிகளை அறிவித்திருந்தது. கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விவாதத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 3, 4,5,6,7ஆம் திகதிகளில் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.