சினிமாவில் இவரை பிடிக்காது என்று சொல்ல எந்த காரணமும் இல்லாத ஒரு நடிகை என்றால் நமீதாவை கூறலாம். எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நமீதா அஜித் , விஜய் என முன்னணி நட்ச்சத்திரங்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவராவார்.
இவர் 2017 ஆம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்;.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்க தற்போது பிரிய போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் நமிதா சமூகவலைதளங்களில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
வதந்திகள் இன்னும் அடங்கவில்லை என தெரிந்ததும் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றோம் இந்த வதந்தியை பார்த்து நாங்கள் இருவரும் சிரித்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.