“பொருளாதார கொள்கைதிட்டம் தொடர்பாக ஜூன் மாதம் 6 ஆம் திகதி விவாதம் இடம்பெறவில்லையாயின் அதன்பின்னர் விவாதம் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை” என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலேயே விவாதம் பெரும்பாலும் ஜூன் 6 ஆம் திகதி இடம்பெறும். நாம் பல திகதிகளை அறிவித்திருந்த போதிலும் சஜிதி பிரேமதாசவுக்கு நாம் வழங்கிய திகதிகளில் விவாதத்தில் பங்கேற்கமுடியாது என தெரிவித்தனர்.
ஜூன் 6 ஆம் திகதி விவாதம் இடம்பெறவில்லையாயின் அதன்பின்னர் இருதரப்பினருக்கும் இடையில் விவாதம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை.
நாட்டில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. பல காரணங்களை அடிப்படையாகக்கொண்டே நாம் இந்த விவாதம் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.