கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேரூந்து எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி பேருந்தை நோக்கி வந்த போது, பேரூந்து சாரதி முச்சக்கரவண்டியை பேருந்தில் மோதவிடாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.