ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன், எந்தவொரு தேர்தலையும் பிற்போட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியால் தேர்தல்களை பிற்போடும் அதிகாரத்தை இரத்துச் செய்து, அமெரிக்காவில் இருப்பதுபோன்று உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டமொன்றை விரைவில் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.