பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 28 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் குழுக்களை நியமிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.