”தேர்தலைப் பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்” என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டுமக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது. அரசாங்கம் அவ்வாறு முயற்சித்தால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும்.
பாலித ரங்கே பண்டார ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு பலமுறைகள் முயற்சித்துள்ளார் தேர்தல் இன்றி இந்த நாட்டை ரணில்விக்ரமசிங்கவிடம் இந்த நாட்டை 2 வருடங்களுக்கு ஒப்படைக்குமாறு அவர் கூறுகின்றார்.அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இதுஜனாநாயக விரோத செயற்பாடாகும். பாலித ரங்கே பண்டார தெரிவித்த கூற்று மீளப்பெறப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.