”மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜூன் மாதம் முதல்வாரத்தில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த சட்டமூலம் நாளை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவே தெரிகின்றது.
இச்சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் பாதகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மின்சார சபையில் பலருக்கு தொழில்வாய்ப்பு இல்லாமல்போகும் அபாயம் உள்ளது.
மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்கவேண்டும் மின்சாரசபை மறுசீரமைப்பு என்ற பெயரில் அதனை தனியார் மயப்படுத்துவதற்கே முயற்சிப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு சேவைகளை வழங்கவேண்டும் அதனை விடுத்து தனியார் மயப்படுத்துவது தீர்வாக அமையாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.