பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடான டோங்கா(tonga) தீவில், இன்று நிலநடுக்கமொன்று பதிவானதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நில நடுக்கமானது, டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் பதிவாகியுள்ளதுடன், ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளதுடன், 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகையை கொண்ட டோங்கா நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ள நிலையில், சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் டோங்கா தீவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.