அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் திகதியின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.