”தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
பாலித ரங்கேபண்டார நேற்றைய தினம் அவரது தனிப்பட்ட கருத்தினையே முன்வைத்திருந்தார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவோம்.
பாலித ரங்கே பண்டார கூறியது போன்று தேர்தலை 2வருடங்களுக்கு பிற்போடும் யோசனை முன்வைக்கப்பட்டால் நாம் அதற்கு உடன்பட மாட்டோம்” இவ்வாறு பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.