பெசில்- ரணில் ஆகியோர் கூட்டு சதித்திட்டம் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தொடர்பாக ராஜபக்ஷ தரப்பினர் மற்றும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை அறிந்து கொண்டோம். பாலித ரங்கே பண்டாரவின் கூற்றின் ஊடாக அது தெளிவாகின்றது.
பெசில் ரணில் ஆகியோர் கூட்டு சதித்திட்டம் ஊடாக ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றனர்.அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நாட்டில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவுக்கு இன்று மக்கள் ஆணை இல்லை.தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தனியொருவராக செயற்படவில்லை. ராஜபக்ஷ தரப்பினரும் இதற்கு பின்னால் செயற்படுகின்றனர்.தேர்தலை பிற்போடுவதாயின் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும. நாட்டுமக்களுக்கு என்னதேவை என்பதை அதனூடாக அறிந்து கொள்ள முடியும்” இவ்வாறு ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.