”ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அரசியலமைப்பின் பிரகாரம் நீடிக்க முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
”இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை யாருடையது?” என விசாரிக்க வேண்டிய அவசியமில்லை,என்றும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அதனை உறுதிப்படுத்த எவரும் இல்லை எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.