தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சட்டவிரோத மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுவந்துள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ”உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு மேலதிகமாக, தடயவியல் அறிக்கைகளை வரவழைத்து அவர்களின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.