பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளப் பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடி அற்றது என அறிவிக்குமாறு கோரி தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை முன்வைத்தார்.
அதனையடுத்து மேலதிக விடயங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அக்கரப்பத்தன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 தோட்டக் கம்பனிகளினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உள்ளிட்ட 52 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனா்.