”ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கரந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது.
நாடு ஸ்திரத்தன்மை அடைந்துவரும் நிலையில் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் எவரேனும் இடையூறு விளைவித்தால் நாடு மீண்டும் பாதாளத்திற்கு செல்லும். அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாமல் போகும்” இவ்வாறு வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.