ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும் என்பதை ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் தெரிவு செய்த ஜனாதிபதியே தற்போது ஆட்சியில் உள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது தொடர்பாக அடுத்தவாரம் அவர் தனது தீர்மானத்தை அறிவிப்பார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் மேற்கொள்ளமாட்டார். அனைவருடனும் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்வார். ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக இடம்பெறும் என்பதை ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்” இவ்வாறு எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.