”ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை” என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐந்து வருடங்களில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பிலேயே இந்த தீர்மானம் காணப்படுகின்றது.
எனவே அரசியலமைப்பின் பிரகாரம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதுபோன்றே நாடாளுமன்றிலும் உறுப்பினர் ஒருவர் மாத்திரமே உள்ளார். தேர்தலில் தோல்வியடைவதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.