இஸ்ரேல் பிரஜைகள் தங்கள் நாட்டுக்குள் வருகை தருவதற்கு மாலைத்தீவு அரசு தடை விதித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாலைதீவில் இருக்கும் தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலை தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.