வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் சிரேஷ்ட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றோருக்கான நியமனக் கடிதங்கள், இன்று (03) காலை வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி தீபிகா குணரத்தின, ஆளுனரின் செயலாளர் எம்.ஐ. இலங்கக்கோன் உள்ளிட்ட பலர் கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நஸீர் அஹமட்” வடமேல் மாகாணத்தின் நிர்வாக சேவை உள்ளிட்ட அனைத்து அரச துறைகளையும் சீரான முறையில் நடத்திச்செல்ல விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.