உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் காணப்படும் ஏற்பாடுகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள விடங்களை எதிர்க்கட்சி தலைவர் தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்.
திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றே நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் முன்னெடுக்கப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்படும்” இவ்வாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.