தனிப்பட்ட தேவை கருதி மின்சாரசபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின்சார சட்டமூலத்தில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. அதனாலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகின்றது என அறிவித்துள்ளது.
உத்தேச மின்சாரபை சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்ம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை கருத்திற்கொள்ள வேண்டும். அதன்பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும்.
அவரவரின் தனிப்பட்ட தேவை கருதி மின்சாரசபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது ” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.