தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ள அமிரித் பால் சிங், பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங், பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இந்நிலையில், அம்ரித்பால் சிங் எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சி சார்பாக லால்ஜித் சிங் புல்லார், பாஜக சார்பாக மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் அம்ரித்பால் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை விட 1,00,056 வாக்குகள் வித்தியாசத்தில் அம்ரித்பால் சிங் முன்னிலை வகிக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது பஞ்சாபிலுள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 01 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இந்த மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.