நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இத் தீர்ப்பை வாசித்த சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மாத்திரமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.