குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 இலட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது
அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதேவேளை பா..ஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
மேலும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா சுமார் 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இப்போது 2-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்ட அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிட்டுள்ளார்.