இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஒரு பகுதியை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் .மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முப்படைகளின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.