மட்டக்களப்பு, வவுணதீவு, நெடுஞ்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை ஆற்றங்கரை அருகே உள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றே இவ்வாறு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
05 பரல் கோடா, 150 போத்தல் கசிப்பு மற்றும் உற்பத்தி உபகரணங்கள் பொலிஸாரினால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.