அம்பாந்தோட்டை ரன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாந்தோட்டை, ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், குறித்த பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், நேற்று இரவு முதலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது, இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.