பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான கணேமுல்ல சஞ்சீவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதாள குழுவின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவ கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி அன்று நேபாளத்தில் இருந்து நாடுதிரும்பிய சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி பெற்றிருந்தனர்
இதனையடுத்து, அவர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.