நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, ஓபநாயக்க, எலபாத, கலவான, இம்புல்பே, எஹெலியகொட மற்றும் கிரியெல்ல ஆகிய 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.