மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது
விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்துடன் விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார்.
மேலும் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.