நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த 10 நாட்களில் நாட்டில் பதிவான 971 நோயாளர்களில் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 18.7 வீதமானோர் பாடசாலைகளை அண்மித்துள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.