ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இரு இந்தியர்கள் உக்ரைனுடான போரில் உயிரிழந்துள்ள சம்பவம் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும், பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு அநேகமானவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆனால், அங்கு தொழில் பெற்றுத்தராது, உக்ரைனுடன் போரில் சண்டையிட, ரஷ்ய இராணுவத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.