முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற முதலமைச்சர் சந்திரபாடு நாயுடுவின் பதவிவேற்பு விழாவிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது விழா மேடையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இதன்போது விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார். அப்போது திடீரென தமிழிசையை அழைத்த அமித்ஷா அவரை கண்டிப்பது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளன.
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி.தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தாரா திரு.அமித்ஷா????
காட்சி சொல்லும் செய்தி என்ன???? pic.twitter.com/PlGUufGtem— Prakash Narasimman (@Prakash_2803) June 12, 2024