உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது.
பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார அமைப்பு, பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வருகின்றது.
அந்தவகையில் 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 129வது இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம் குறித்த பட்டியலில் முதல் 5 இடங்களையும் முறையே ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
மேலும் 146 ஆவது இடத்தில் சூடான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.