பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் 6வது பிரதிவாதியான ஜோசப் அலோசியஸ் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 1 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு நீதிபதிகளான அமல் பெரேரா, நாமல் பெரேரா பலாலே மற்றும் ஆதித்ய படபண்டிகே ஆகியோர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.