”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது தொடர்பாக மக்கள் இருமுறை சிந்திப்பார்கள். கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினரின் செயற்பாடுகளை மக்கள் மறக்கவில்லை.
கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கியிருந்த நெருக்கடிகளை சாதகமாக பயன்படுத்தியே வாக்கு எண்ணிக்கையை பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதி ரணில் ரவிக்ரமசிங்க நாட்டு மக்கள் சுமூகமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் எரிவாயு எரிபொருள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடந்தும் முயற்சித்து வருகின்றார்.
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மை அடைந்துள்ளது.நாட்டிற்குள் சுமூகமான சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான ஒரு சூழலில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டிற்கு பொருத்தமான தலைவர் ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.