பதுளை ஹாலி எல வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை ஹாலி எல வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் திட்டமிட்ட முறையில் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.