நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து திணைக்கள பொலிஸ் அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து புதிய சுற்றறிக்கையை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 1,800 ரூபா 6,000 ரூபாவாகவும், பரிசோதகர் தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும், போக்குவரத்து நிலைய அதிகாரிக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அவர்கள் வெயில், மழை, இடையூறுகளுக்கு மத்தியில் நெடுஞ்சாலைகளில் சுமார் பன்னிரெண்டு மணிநேரம் போக்குவரத்தை கையாள்வது கடினமான பணி என்பதாலும், வாகன புகை உள்ளிட்ட நச்சுக்களை சுவாசிப்பதால் அதிகமானோர் சுவாசக்கோளாறால் அவதிப்படுவதாலும் இந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.