ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாடு நேற்று இத்தாலியில் அபுலியாவில் (Apulia) ஆரம்பமானது.
உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் செயற்படுகின்றன.
குறித்த மாநாட்டில் இம்முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேன்(Ukraine) ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் துருக்கி(turkey) ஜனாதிபதி Recep Tayyip Erdoğan ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் ரஷ்ய இறையாண்மை சொத்துக்களிலிருந்து உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகைகளை வழங்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கான ஒத்துழைப்புக்களை இரட்டிப்பாக்குதல், சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபளித்தல் என்பன இந்த மாநாட்டின் இலக்கு என குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, 10 வருட இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்க்கி ஆகியோர் கைச்சாட்டுள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் பாதுபாப்பை பலப்படுத்துவதையும், உக்ரேனை நேட்டோ உறுப்பினர்களுடன் நெருக்கமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும் – உக்ரேனுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.