ஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன தொிவித்துள்ளாா்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
“அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
அதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை, நிதியமைச்சர் என்ற நீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க 10 பில்லியன் ரூபாவை இவ்வருட வரவு செலவு திட்டத்திலிருந்து ஒதுக்கியுள்ளார்.
எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு, முறைப்படி நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை தொடச்சியாக நடத்திச் செல்லும்.
ஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையிலோ, ஏனைய கட்சிகளோ இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை” என அமைச்சா் பந்துல குணவா்தன மேலும் குறிப்பிட்டாா்.