ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அந்த நிபந்தனைகளின்படி தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த பத்து நிபந்தனைகளின்படி பொருளாதாரத்தை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பிலும் திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.